Paristamil Navigation Paristamil advert login

நியூயார்க் நகரில் பாரிய வெள்ளப் பெருக்கு....  தப்பிச்சென்ற நீர்ச்சிங்கம்

நியூயார்க் நகரில் பாரிய வெள்ளப் பெருக்கு....  தப்பிச்சென்ற நீர்ச்சிங்கம்

1 ஐப்பசி 2023 ஞாயிறு 09:07 | பார்வைகள் : 7335


அமெரிக்காவின் நியூயார்க் நகரில்  அடைமழை பெய்து வருகின்றது.

இந்நிலையில்  Central Park விலங்கியல் தோட்டத்தின் குளத்தில் வெள்ளத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பெண் நீர்ச்சிங்கத்தின் குளத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது அது அங்கிருந்து நீந்திச் சென்றதாக CNN தெரிவித்தது.

சுற்றியிருக்கும் பகுதிகளில் நீந்திய பிறகு அது அதன் இருப்பிடத்துக்குத் திரும்பியது. 

மற்ற 2 நீர்ச்சிங்கங்களுடன் அது விலங்கியல் தோட்டத்தில் வசிப்பதாக CNN தெரிவித்தது.

நீர்ச்சிங்கம் திரும்பும்வரை விலங்கியல் தோட்ட ஊழியர்கள் அதனைக் கண்காணித்தனர்.

தற்போது நீர்ச்சிங்கங்களின் குளத்தில் நீர்மட்டம் குறைந்துள்ளதாகவும் அனைத்து விலங்குகளும் அவற்றின் இருப்பிடங்களில் உள்ளதாகவும் விலங்கியல் தோட்டம் தெரிவித்தது.

சம்பவத்தில் யாருக்கும் காயமடையவில்லை என்றும் தப்பிய நீர்ச்சிங்கம் விலங்கியல் தோட்ட வளாகத்தைவிட்டுச் செல்லவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்