Paristamil Navigation Paristamil advert login

சச்சின் சாதனையை முறியடிக்க தயாராகும் விராட் கோலி

சச்சின் சாதனையை முறியடிக்க தயாராகும் விராட் கோலி

1 ஐப்பசி 2023 ஞாயிறு 08:28 | பார்வைகள் : 6149


எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் சச்சினின் சாதனையை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முறியடிக்க உள்ளார்.

இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.

இதில் இந்தியா, அவுஸ்திரேலியா, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பலப்பரீட்சை செய்யவுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் உலக கோப்பை தொடரில் வெறும் 20 ஓட்டங்கள் சேர்த்தால் ஐசிசி தொடர்களில் அதிக ஓட்டங்களை குவித்த இந்திய வீரர் என்ற சச்சினின் சாதனையை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முறியடிப்பார்.

சச்சினின் ஐசிசி தொடர்களில் மொத்தமாக இதுவரை 2,719 ஓட்டங்கள் குவித்துள்ளார். தற்போது விராட் கோலி 2,700 ஓட்டங்கள் வரை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்