அஜித் விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாகுமா?
30 புரட்டாசி 2023 சனி 14:54 | பார்வைகள் : 10683
மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடிக்கும், 'விடாமுயற்சி' படமும், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 68வது படமும் இன்னும் சில நாட்களில் படப்பிடிப்புடன் ஆரம்பமாக உள்ளது. இப்போதுள்ள நடிகர்களில் அதிக போட்டியுடன் இருப்பவர்கள் விஜய், அஜித்.
விஜய் நடித்த 'வாரிசு' படமும், அஜித் நடித்த 'துணிவு' படமும் ஒரே நாளில் வெளிவந்தது. அதற்கடுத்து விஜய் 'லியோ' படத்தில் நடித்து முடித்துவிட்டார். இப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. ஆனால், இயக்குனர் மாற்றம், கதை உருவாவதில் தாமதம் என அஜித்தின் படம் ஆரம்பமாவது தள்ளிப் போனது. இப்போது இருவரது படங்களின் படப்பிடிப்பும் ஒரே சமயத்தில் ஆரம்பமாக உள்ளது.
அதனால், 2024ல் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகுமா என இருவரது ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள். விஜய், அஜித் படம் அப்படி போட்டியுடன் வந்தால்தான் இருவரது ரசிகர்களுக்கும் சுவாரசியமாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் சண்டை போடவும் வசதியாக இருக்கிறது. ரசிகர்களின் விருப்பத்தை இரண்டு படத் தயாரிப்பாளர்களும் நிறைவேற்றுவார்களா ?.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan