ஜேசன் சஞ்சய்யின் அதிரடித் திட்டம்..!
30 புரட்டாசி 2023 சனி 14:44 | பார்வைகள் : 9118
தளபதி விஜய் நடித்துள்ள ’லியோ’ திரைப்படம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியானவுடன் இந்த படத்திற்கு உச்சபட்ச எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏற்கனவே 'லியோ’ திரைப்படத்தில் அர்ஜுன், சஞ்சய்தத் உட்பட ஒரு மிகப்பெரிய நட்சத்திர கூட்டம் நடித்துள்ள நிலையில் கமல்ஹாசன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் சமீபத்தில் ’லியோ’ படத்திற்காக டப்பிங் செய்ததாகவும் இந்த டப்பிங் செய்யப்பட்டபோது விஜய்யும் அருகில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
’விக்ரம்’ திரைப்படத்தில் விக்ரம் மற்றும் கமாண்டர் கர்ணன் கேரக்டரில் நடித்திருந்த கமல்ஹாசன் எல்சியு காட்சிகள் ’லியோ’ படத்தில் இணைக்கப்பட்டுள்ளதா? அல்லது ’பொன்னியின் செல்வன்’ படம் போல் கதை சுருக்கத்தை முன்னோட்டமாக அவர் படம் ஆரம்பிக்கும் போது பேசி உள்ளாரா? என்பதை படம் வெளியாகும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மொத்தத்தில் கமல்ஹாசன் இந்த படத்தில் இணைந்துள்ளதாக வெளியான செய்திகள் இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan