நியூயார்க் நகரில் அவசர நிலை பிரகடனம்

30 புரட்டாசி 2023 சனி 09:06 | பார்வைகள் : 7440
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கன மழை பெய்து வருகின்றது.
இந்த கன மழையால் நகர் முழுவதும் வெள்ளம் பெருகிய நிலையில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலை வழித்தடம் தெரியாமல் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் சுரங்க நடைபாதைகளிலும் வெள்ளநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்ப்டடத
மேலும் நாளை வரை மழை நீடிக்கும் என வானிலை நிலவரம் தெரிவித்திருப்பதால் அவசர நிலையை நியூயார் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் பிறப்பித்தார்.