செப்., 30 ‛லியோ' இசை வெளியீடு- குட்டி கதை சொல்வாரா விஜய்.?
26 புரட்டாசி 2023 செவ்வாய் 14:08 | பார்வைகள் : 7722
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மன்சூரலிகான் உள்ளிட்ட ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ‛லியோ'. அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஏற்கனவே நா ரெடி என்ற ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அக்., 19ல் படம் வெளியாக உள்ள நிலையில் புரொமோஷன் பணிகள் தீவிரமாகி உள்ளன.
இந்நிலையில் வரும் செப்., 30ல் சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 5 மணியளவில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த போகின்றனர். இதற்கான பணிகள் துவங்கி உள்ளன. ரசிகர்களுக்கான டிக்கெட் விற்பனையும் துவங்கி உள்ளது.
பொதுவாக தன் பட இசை வெளியீட்டு விழாவின் போது குட்டி கதை மற்றும் அரசியல் பேசி பரபரப்பை ஏற்படுத்துவார் விஜய். இதனால் லியோ இசை வெளியீட்டு விழா மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

























Bons Plans
Annuaire
Scan