Paristamil Navigation Paristamil advert login

இலங்கை பெண்களை அச்சுறுத்தும் ஆபத்து!

இலங்கை பெண்களை அச்சுறுத்தும் ஆபத்து!

28 புரட்டாசி 2023 வியாழன் 12:08 | பார்வைகள் : 8651


இலங்கையில் நாளொன்றுக்கு 12 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் விமுக்தி பீரிஸ் இதனை அறிவித்துள்ளார்.
 
அத்துடன், 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பரிசோதனைகளுக்காக மார்பக சுயபரிசோதனைகளை மேற்கொள்ளுதல் மற்றும் வைத்தியசாலைக்கு செல்வதன் மூலம் இந்த நிலையை கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார். 
 
அத்துடன், வருடந்தோறும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 900 சிறுவர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் விமுக்தி பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்