அஜர்பைஜனில் பாரிய வெடி விபத்து
27 புரட்டாசி 2023 புதன் 08:46 | பார்வைகள் : 10798
அஜர்பைஜனில் உள்ள ஸ்டெபனகெர்ட் பகுதிக்கு வெளி வெளியே எரிவாயு நிலையம் இயங்கி வருகின்றது.
இங்கு பிற்பகுதியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்து 13 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்க்கப்பட்டுள்ளது.
மேலும் ஏழு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.
290 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பிராந்தியத்தின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மூன்று தசாப்த கால பிரிவினைவாத ஆட்சிக்குப் பின்னர் அஜர்பைஜானின் பிராந்தியத்தை முழுமையாக மீட்பதற்காக கடந்த வாரம் இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது.
இதன் பிறகு நாகோர்னோ-கராபாக்கின் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் ஆர்மீனியாவிற்கு இப்பகுதியை விட்டு வெளியேறினர்.
அப்போது இந்த வெடி விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan