Paristamil Navigation Paristamil advert login

யாழில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய சந்தோஷ் நாராயணன்!

யாழில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய சந்தோஷ் நாராயணன்!

24 புரட்டாசி 2023 ஞாயிறு 08:53 | பார்வைகள் : 8285


நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு தனது பாரியாருடன் சென்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அஞ்சலி செலுத்தினார். 

இசை நிகழ்ச்சிக்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் அவர் இதனை செய்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்துள்ள சந்தோஷ் நாராயணன் , மாலை யாழ்ப்பாணத்தை சேர்ந்த கலைஞர்களை யாழில் உள்ள விருந்தினர் விடுதியில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். 

அதேவேளை சந்தோஷ் நாராயணனின் மனைவி யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியை சேர்ந்தவர் என்பதும் , அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் சந்தோஷ் நாராயணன் பெரியளவிலான இசை நிகழ்வொன்றினை நடாத்த திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 


 

வர்த்தக‌ விளம்பரங்கள்