பரிஸ் : பாடசாலைக்குள் தஞ்சம் புகுந்த அகதிகள்
23 புரட்டாசி 2023 சனி 17:35 | பார்வைகள் : 16291
பரிசில் உள்ள பாடசாலை வளாகம் ஒன்றுக்குள் அகதிகள் சிலர் குடியேறியுள்ளனர். அங்கு கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர்.
7 ஆம் வட்டாரத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் இவ்வார செவ்வாய்க்கிழமை மாலை அவர்கள் குடியேறியுள்ளனர். மொத்தமாக 25 அகதிகள் அங்கு குடியேறியதாகவும், பகல் இரவுகளில் அவர்கள் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 ஆம் வட்டார நகரபிதா Rachida Dati இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், ஆரோக்கியமற்ற முறையில் அகதிகள் அங்கு தங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
Guinea நாட்டைச் சேர்ந்த அகதிகளே அங்கு தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan