சிறு கோள்களின் ஆகப்பெரிய மாதிரிகளை பூமிக்குக் கொண்டுவந்த விண்கலம்! நாசா

26 புரட்டாசி 2023 செவ்வாய் 08:27 | பார்வைகள் : 6972
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (NASA) அனுப்பிய ஒசைரிஸ்-ரெக்ஸ் (Osiris-Rex ) விண்கலம் நேற்று (24.09.2023) உட்டா (Utah) மாநிலத்தில் உள்ள பாலைவனத்தில் தரையிறங்கியுள்ளது.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அது விண்ணுக்கு அனுப்பப்பட்டிருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறு கோள்களின் ஆகப்பெரிய மாதிரிகளை அது பூமிக்குக் கொண்டுவந்தது.
சூரிய மண்டலத்தின் அமைப்பு, பூமி எப்படி மனித வாழ்க்கைக்கு ஏற்புடையானது முதலியவற்றை மேலும் புரிந்துகொள்ள அந்த மாதிரிகள் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ஒசைரிஸ்-ரெக்ஸ் (Osiris-Rex) விண்கலம், பென்னு (Bennu) எனும் சிறிய கோளிலிருந்து சிறிதளவு தூசியைச் சேகரித்தது.
பூமிக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய சிறு கோள்களைப் பற்றித் தெரிந்துகொள்ள அது உதவும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025