மலேசியாவில் 3 இலங்கையர்கள் படுகொலை - சிக்கிய சந்தேகநபர்கள்
26 புரட்டாசி 2023 செவ்வாய் 07:41 | பார்வைகள் : 7750
மலேசியாவில் மர்மமான முறையில் மூன்று இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் மலேசிய காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.
சரணடைந்த இருவரும் இலங்கையர்கள் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
செந்தூல் பகுதியில் உள்ள இலங்கை தம்பதிக்கு சொந்தமான கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து உயிரிழந்த மூன்று இலங்கையர்களின் சடலங்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரிழந்த மூவரில் ஒருவர் வீட்டினைச் சேர்ந்த தம்பதியினரின் மகன் எனவும், மற்றைய இருவர் வீட்டை வாடகைக்கு குடியிருந்த இருவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகும்.
இந்நிலையில் சந்தேக நபர்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் 2 பேர் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan