Paristamil Navigation Paristamil advert login

யாழில் யுவதி எடுத்த விபரீத முடிவு

யாழில் யுவதி எடுத்த விபரீத முடிவு

26 புரட்டாசி 2023 செவ்வாய் 05:06 | பார்வைகள் : 6828


மனவிரக்தியடைந்த இளம் யுவதி ஒருவர் திங்கட்கிழமை காலை தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். 

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய், மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் டானுகா (வயது 23) என்ற யுவதியை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவரது தாயார் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், தந்தை இரண்டாவது திருமணம் செய்த நிலையில் சித்தியுடனே இவர் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 6ஆம் மாதம் அவரது மாமா உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது 90வது நாள் சடங்கிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து மனவிரக்தியுடன் காணப்பட்டார். 

இந்நிலையில் அவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்