Paristamil Navigation Paristamil advert login

நவிகோ விலையேற்றம்!

நவிகோ விலையேற்றம்!

25 புரட்டாசி 2023 திங்கள் 16:47 | பார்வைகள் : 15211


நவிகோ பயண அட்டை விலையேற்றம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட 3% சதவீதம் வரை விலை அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நவிகோ அட்டை 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அதிகரிக்கப்பட உள்ளது. 2 தொடக்கம் 3% சதவீதம் இந்த விலை அதிகரிப்பு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தற்போது 84.10 யூரோக்களாக உள்ள நவிகோ அட்டை, விலையேற்றத்தின் பின்னர் 86 தொடக்கம் 87 யூரோக்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, நவிகோ அட்டையின் விலையேற்றம் தவிர்க்க முடியாதது என இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்