'வணங்கான்' பர்ஸ்ட் லுக் சொல்லும் செய்தி என்ன?
25 புரட்டாசி 2023 திங்கள் 16:03 | பார்வைகள் : 6720
பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இந்த போஸ்டரில் அருண் விஜய் ஒரு கையில் பெரியார் சிலையையும் இன்னொரு கையில் விநாயகர் சிலையையும் வைத்திருப்பதை அடுத்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடவுளை மறுப்பு கொள்கை உடைய பெரியார் மற்றும் கடவுளின் அடையாளமாக இருக்கும் விநாயகர் ஆகிய இரண்டு சிலைகளையும் ஒருசேர கையில் வைத்திருப்பதை பார்க்கும்போது இயக்குனர் பாலா ஏதோ வித்தியாசமாக சொல்ல வருகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அருண் விஜய் உடல் முழுவதும் சேறும் சகதியுமாக இருப்பதும் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அருண் விஜய் ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan