இலங்கையில் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தால் கடும் சட்ட நடவடிக்கை

12 ஆடி 2023 புதன் 05:40 | பார்வைகள் : 12661
இலங்கையில் விகாரைகளில் இடம்பெறும் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்களை சமூகத்திற்கு தேவையில்லாமல் பிரசாரம் செய்யும் தரப்பினருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
கடுவெல, நவகமுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தாம் அறிந்தவுடன் பொலிஸாருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்ததாகவும், பொலிஸார் விரைந்து செயற்பட்டு சந்தேக நபர்களை கைது செய்ததாகவும் விதானபத்திரன தெரிவித்தார்.
அந்த சம்பவத்தில் பிக்குவின் நடத்தை மற்றும் பிக்கு உட்பட இரு பெண்கள் வெளி தரப்பினரால் தாக்கப்பட்டமை தவறானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவங்களை சமூக வலைத்தளங்கள் மற்றும் ஏனைய ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்துவது பிரச்சினையாக மாறியுள்ளதாக தெரிவித்த அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, ஏனைய பிக்குகளும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
நவகமுவ பிரதேசத்தில் உள்ள விகாரையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் தீர்மானம் எடுக்க வேண்டுமெனவும், அந்த விடயத்தில் புத்த சாசன அமைச்சு தலையிடாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025