மீண்டும் நவிகோ விலையேற்றம் - அடுத்த வாரத்தில் 'நல்ல செய்தி' காத்திருப்பதாக தகவல்

21 புரட்டாசி 2023 வியாழன் 08:25 | பார்வைகள் : 8320
2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நவிகோ பயண அட்டை விலையேற்றம் காணும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்தவாரத்தில் இது தொடர்பான நல்ல செய்தி ஒன்றை எதிர்ப்பாக்க முடியும் என இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse அறிவித்துள்ளார்.
'இல் து பிரான்ஸ் பொது போக்குவரத்து சபையின் புதிய இயக்குனர்கள் அடுத்தவாரம் உருவாக்கப்பட உள்ளனர். அடுத்தவாரத்தில் நல்ல செய்தி ஒன்று அறிவிக்கப்படும் என நான் எதிர்பாக்கிறேன்!' என அவர் தெரிவித்தார். விலையேற்றம் தவிர்க்கமுடியாதது என்றபோதும், 'எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைந்த விலையேற்றத்தை ஏற்படுத்த நாம் முயற்சிக்கிறோம்' எனவும் Valérie Pécresse தெரிவித்தார்.
இவ்வருடத்தின் ஜனவரி 1 ஆம் திகதி 75.20 யூரோக்களில் இருந்து 84.10 யூரோக்களாக நவிகோ கட்டணம் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.