யாழில் திடீரென தீக்கிரையான பேருந்து!
21 புரட்டாசி 2023 வியாழன் 05:23 | பார்வைகள் : 10581
யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்று தீக்கிரையாகியுள்ளது.
ஆனைக்கோட்டை சாவல்காட்டு பகுதியில் வசிக்கும் பேருந்து உரிமையாளர் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு தனது வீட்டின் முன்பாக பேருந்தினை நிறுத்தி இருந்தார்.
அந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை பேருந்து தீ பிடித்து எரிவதனை அவதானித்து தீயை அணைக்க முற்பட்ட போதிலும் பேருந்து முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பேருந்து மின் ஒழுக்கு போன்ற காரணங்களால் தீ பிடித்ததா ? அல்லது வன்முறை கும்பல்களின் நாசகார வேலையா ? என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025


























Bons Plans
Annuaire
Scan