Paristamil Navigation Paristamil advert login

பிரபல பில்போர்ட் தளத்தில் இடம்பெற்ற அனிருத் பாடல்!

பிரபல பில்போர்ட் தளத்தில் இடம்பெற்ற அனிருத் பாடல்!

20 புரட்டாசி 2023 புதன் 15:40 | பார்வைகள் : 2811


பாலிவுட்  சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று  வசூல் சாதனை படைத்து வருகிறது. ஷாருக் கானின் சமீபத்தைய படமான பதான்  மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதேபோல் ஜவான் படமும் சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில், ஜவான் படம்  வெளியாகி இதுவரை கோடி ரூ.900 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம்  அறிவித்துள்ள நிலையில்,  இப்படம் ரூ.1000 கோடி வசூலிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், சலேயே என்ற பாடல் உலகின் பிரபல பில்போர்ட் தளத்தில் குளோபல் 200 பிரிவில்  97 வது  இடம் பிடித்துள்ளது.

இதை அனிருத் தன் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்