பிரித்தானியாவில் பிங்க் புறா - ஆச்சிரியத்தில் மக்கள்
20 புரட்டாசி 2023 புதன் 09:09 | பார்வைகள் : 10365
பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் பிங்க் நிற புறா காணப்பட்டுள்ளது.
இந்த பிங்க் புறாவை கண்டதும் பொதுமக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
பொதுவாக பறவை இனத்தை சேர்ந்த புறாக்கள் அளவில் மிக சிறியனவாகவும், வெள்ளை, சாம்பல் மற்றும் கதிர் நிறங்களிலும் அதிகமாக காணப்படுகின்றன.
ஆனால் முதல் முறையாக பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் இளஞ்சிவப்பு நிறம்(பிங்க்) கொண்ட துடிப்பான புறா ஒன்றை பொதுமக்கள் கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
பிங்க் நிற புறாவை ஆச்சரியத்துடன் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதற்கு உணவுகளை வழங்கியதுடன், அந்த பிங்க் புறாவை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றி வருகின்றனர்.
மேலும் இந்த பிங்க் புறா குறித்து தகவல் அறிந்த பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து புறாவை பார்வையிட்டுள்ளனர்.
புறாவின் வித்தியாசமான கலர் தோற்றம் மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
புறாவின் இந்த தனித்துவமான பிங்க் நிறம் இயற்கையாக உருவானதா? அல்லது யாரேனும் அதன் மீது பிங்க் நிற சாயத்தை பூசிவிட்டார்களா? அல்லது நிறத்தை மாற்றக்கூடிய சாயத்திற்குள் புறா விழுந்து விட்டு வந்ததா? என பல கேள்விகளை இணையதளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

























Bons Plans
Annuaire
Scan