Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

மார்செய் நகரில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் - இன்று பாப்பரசருடன் சந்திப்பு

மார்செய் நகரில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் - இன்று பாப்பரசருடன் சந்திப்பு

23 புரட்டாசி 2023 சனி 07:00 | பார்வைகள் : 12432


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மார்செய் நகருக்கு சென்றடைந்தார். அங்கு வருகை தந்துள்ள பரிசுத்த பாப்பரசரை சந்திப்பதற்காக அவர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் ஆகியோர் நேற்று இரவு 8 மணி அளவில் தனி விமானத்தில் மார்செய் சென்றடைந்தனர். பின்னர் அவர்கள் நேற்று இரவு விருந்துபசார நிகழ்வொன்றில் பங்கேற்றனர். மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட விருந்தினர்களுடன் இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது.

இந்நிலையில், இன்று சனிக்கிழமை மாலை அங்குள்ள Vélodrome அரங்கில் மிகப்பெரும் மதக்கூட்டம் ஒன்று இடம்பெறுகிறது. இதற்கு பரிசுத்த பாப்பரசர் தலைமையேற்கிறார். இந்த நிகழ்வில் 60,000 பேர் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதன்பின்னரே, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பாப்பரசரை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11.30 மணி அளவில் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது. மார்செயில் உள்ள Pharo மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது. அங்கு வைத்து உத்தியோகபூர்வ புகைப்படங்கள் எடுக்கவும், பரிசுகள் கையளிக்கப்படவும் உள்ளன. 

அதன்பின்னர், இருவரும் பங்கேற்கும் ஊடக சந்திப்பு ஒன்றும் இடம்பெற உள்ளதாக அறிய முடிகிறது. 

நேற்று மாலை வத்திக்கானில் இருந்து மார்செய் நகருக்கு வருகை தந்த பாப்பரசரை பிரதமர் Élisabeth Borne மற்றும் உள்துறை அமைச்சர் Gérald Darmanin ஆகியோர் வரவேற்றிருந்தனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்