மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் - பிரான்சில் இருந்து புறப்பட்டார் இங்கிலாந்து மன்னர்

22 புரட்டாசி 2023 வெள்ளி 17:19 | பார்வைகள் : 14504
இங்கிலாந்து மன்னர் சாள்ஸின் முதலாவது உத்தியோக பூர்வ அரச பயணம் சற்று முன்னர் நிறைவுக்கு வந்துள்ளது.
மூன்று நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மன்னர் சாள்ஸ் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோர் சற்று முன்னர் பிரான்சில் இருந்து புறப்பட்டுள்ளனர். இன்றைய மூன்றாவது நாளினை Gironde நகரில் செலவிட்ட அவர்கள், அங்கிருந்து புறப்பட்டு ஸ்கொட்லாந்தின் Aberdeen நகருக்கு பயணிக்க உள்ளதாக அறிய முடிகிறது.
புதன்கிழமை காலை பரிசுக்கு வந்தடைந்த அரசர் சாள்ஸ் மற்றும் அரசியார் கமீலா ஆகிய இருவரையும் பிரதமர் Élisabeth Borne வரவேற்றிருந்தார். பின்னர் அவர்கள் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனைச் சந்தித்தனர். பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் பல்வேறு நிகழ்வுகளில், சந்திப்புக்களில் கலந்துகொண்டுவிட்டு, சற்று முன்னர் அவர்கள் நாட்டை விட்டு புறப்பட்டுள்ளனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025