Paristamil Navigation Paristamil advert login

ஈரான் நாட்டுக்கு எதிராக தடைகளை விதிக்கும் கனடா!

 ஈரான் நாட்டுக்கு எதிராக தடைகளை விதிக்கும் கனடா!

18 புரட்டாசி 2023 திங்கள் 08:46 | பார்வைகள் : 9067


கனடா அரசாங்கமானது ஈரான் மீது மேலும் தடைகள் விதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஈரானைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மீது இவ்வாறு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஷா அம்னி என்ற ஈரானிய இளம் உயிரிழந்த விவகாரத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு இவ்வாறு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானைச் சேர்ந்த ஆறு சிரேஸ்ட அதிகாரிகள் மீது தடை விதிக்கப்படுவதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி அறிவித்துள்ளார்.

ஹிஜாபை உரிய முறையில் அணியத் தவறியதாக கைது செய்யப்பட்ட அம்னி, ஈரானில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்திற்கு சர்வதேச அளவில் கடுமையான கண்டனம் வெளியிடப்பட்டிருந்தது.

கடந்த பதினொரு மாதங்களில் ஈரான் மீது 13 தடவைகள் கனடா தடை விதித்துள்ளது.

இந்த இறுதியாக அறிவிக்கப்பட்ட தடையானது 14ம் தடவையாக அறிவிக்கப்படும் தடை என்பது குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்