தியாகதீபம் திலீபன் ஊர்தி மீது தாக்குதல் - தசர்வதேசம் திரும்பிப் பார்க்கட்டும்!

18 புரட்டாசி 2023 திங்கள் 06:30 | பார்வைகள் : 8623
திலீபன் ஊர்தி திருகோணமலையில் வைத்து சிங்களவர்களால் தாக்கப்பட்டமைக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
திலீபன் அண்ணா ஊர்தி தாக்கப்பட்டமை தொடர்பில் சர்வதேசம் திரும்பிப் பார்க்க வேண்டுமென யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் அண்ணாவை நினைவேந்தி அவரது உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது சிங்கள அடிப்படை வாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மாணவர் சமூகமான நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
திலீபன் அண்ணாவின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்தியானது தமிழர் தலைநகரிலேயே தாக்கப்பட்ட இந்தச் சம்பவமானது வடகிழக்கு மாகாணங்களில் இன்னமும் தமிழ் மக்களுக்கு அவர்களது குறைந்த பட்ட நினைவுகூறும் உரிமை கூட மறுக்கப்பட்டு வருகின்றது என்பதற்கு சாட்சியமாகும்.
அகிம்சையைப் பற்றிப் போதித்து அகிம்சாவாதிகளிற்கும் சனநாயகவாதிகளிற்கும் முன்னுதாரணமாக விளங்கும் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் இந்த நினைவேந்தலை தாக்கும் சிங்கள அடிப்படைவாதக் கும்பல்களைப் பார்த்தாவது உலகச் சமூகமும் நம் மக்களும் நமது இந்த நிலை பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டுமென மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1