தியாகி திலீபனின் நினைவூர்தி மீதான தாக்குதலுக்கு கண்டனம்
18 புரட்டாசி 2023 திங்கள் 05:10 | பார்வைகள் : 8273
தியாகி திலீபனின் நினைவூர்தி மீதான தாக்குதலுக்கு கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் ஊர்திப் பவனிமீது சிங்கள காடையர் குழுவின் திட்டமிட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம் என கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், சாதரண எங்கள் நினைவேந்தலைக்கூட செய்ய முடியாத இந்த துர்பாக்கிய நிலைக்கு அரசாங்கம் பொறுப்பு கூறுவதோடு இந்த திட்ட தாக்குதலை செய்ய தூண்டியவர்களுக்கும் தாக்குதலை நடாத்திய காடையர்களுக்கு உரிய தண்டனையினையும் வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan