பொபினியில் துப்பாக்கிச் சூடு - ஐவர் காயம்!!

17 புரட்டாசி 2023 ஞாயிறு 16:14 | பார்வைகள் : 16304
நேற்று நள்ளிரவிற்கு சற்று முன்னதாக பொபினியின் (Bobigny - Seine-Saint-Denis) பதட்டமான ஒரு பகுதியில் துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன.
இதில் ஐவர் காயமடைந்துள்ளனர். இதில் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர் என பொபியின் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இங்குள்ள cité Grémillon குடியிருப்புப் பகுதியில் ஸ்கூட்டரில் வந்த இருவர் இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அவிசென் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதில் 20 மற்றும் 28 வயதுடைய இருவர் தீவிரசிகிச்சையில் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளனர்.
இன்னமும் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025