93ம் மாவட்டக் காவற்துறையினர் ஐவர் கைது! சிறைத்தண்டனை!!
17 புரட்டாசி 2023 ஞாயிறு 15:57 | பார்வைகள் : 13616
93ம் மாவட்டத்தில் உள்ள பந்தன்(Pantin) நகரக் காவற்துறையினர் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதீத வன்முறை, அனுமதிக்கப்படாத, சட்விரோதமாக, வீடுகளில் இரவு தேடுதல் வேட்டை, போலியான குற்றப்பணம் அறிவிடல் (Pஏ) சிட்டைகளிற்குப் பணம் பெறுதல் போன்ற தொடர்ச்சியான குற்றங்களிற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பந்தன் காவற்துறையினரின் தலைமைக் காவற்துறை அதிகாரியும் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஒரு 17 வயது இளைஞன மீது நடாத்தப்பட்ட இந்தக் காவற்துறையினரின் வன்முறையில் அவரது கை என்புகளும் முறிக்கப்பட்டிருந்தன.
இவர்களை விசாரித்த நீதிமன்றம் அவர்களின் குற்றத்தின் அடிப்டையில் மூன்று மாதம் முதல் மூன்று வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளன.
தண்டனையின் பின்னர் இவர்கள் காவற்துறையினராகச் செயற்பட முடியாது எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஐவரிற்குத் தண்டனை வழங்கப்பட ஆறாவதாக கைது செய்யப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

























Bons Plans
Annuaire
Scan