மகிழுந்துகளை திருடி ஆப்பிரிக்க நாடுகளில் விற்ற ஏழு பேர் பரிசில் கைது
17 புரட்டாசி 2023 ஞாயிறு 15:14 | பார்வைகள் : 5273
மகிழுந்துகளைத் திருடி ஆப்பிரிக்க (l'Afrique) நாடுகளில் விற்பனை செய்த ஏழு பேர் கொண்ட குழு ஒன்றை பரிஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் வரையான ஒரு வருட காலத்தில் மொத்தமாக 200 மகிழுந்துகள் இவர்களால் திருடப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையான மகிழுந்துகள் இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள் திருடப்பட்டவையாகும். இவை தவிர்த்து சுவிசர்லாந்து, பெல்ஜியம், ஜேர்மனி போன்ற நாடுகளிலும் இவர்கள் மகிந்துகளை திருடியுள்ளனர்.
இல் து பிரான்சுக்குள் திருடப்பட்டவைகளில் அதிகமானவை Peugeot 3008s வகை மகிழுந்துகளாகும். Gambia மற்றும் Senegal போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் மகிழுந்துகளை விற்பனை செய்துள்ளனர்.
ஏழு பேர் கொண்ட கடத்தல்காரர்களை பரிஸ் காவல்துறையினர் கடந்தவாரத்தில் கைது செய்துள்ளனர்.