90 வயது மூதாட்டி படுகொலை - மகன் கைது!!
17 புரட்டாசி 2023 ஞாயிறு 17:30 | பார்வைகள் : 13146
துலூஸ் நகரில் 90 வயதுடைய மூதாட்டி கத்திக்குத்துகளிற்கு இலக்காகிக் கொல்லப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக இவரது 59 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தொடர்ச்சியாகக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலும் தன் தாயின் கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தொடர்ச்சியான விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.
வேண்டுமென்றே குடும்பத்தில் ஒருவரைக் கொலை செய்தமை என்ற ரீதியிலேயே இவரது மகன் விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். ஆனாலும் காவற்துறையினரிடம் எந்த ஆதாரங்களோ அல்லது வாக்குமூலங்களோ இதுவரை கிடைக்கவில்லை.
மேலதிக விசாரணைகள் உடற்கூற்றுப் பகுப்பாய்வின் பின்னரே தொடர முடியும் எனக் காவற்துறைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக இவரைக் காவலில் வைப்பதற்கும் நீதிமன்ற உத்தரவு பெறப்படல் வேண்டும்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan