பெல்ஜியத்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட சிக்கிய ஆபத்தான பொருள்

20 புரட்டாசி 2023 புதன் 07:16 | பார்வைகள் : 9076
பெல்ஜியத்தில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் ஒருதொகை ஹஷிஸ் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
16.4 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷிஸ் போதைப்பொருளையே ஒருகொடவத்தை கொள்கலன் முனையத்தில் வைத்து சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
வென்னப்புவ, ஹலவத்த பகுதியில் உள்ள முகவரிக்கு குறித்த பொதி அனுப்பப்பட்டுள்ளதுடன் அதில் ஒரு கிலோ 98 கிராம் எடையுடைய ஹஷிஸ் இருந்ததாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்த முகவரி தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் போது முகவரி போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஹஷிஸ் போதைப்பொருள் கையிருப்பு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025