பரிஸ் : வீடற்றவர் ஒருவரை தீவைத்து எரிக்க முற்பட்டவர் கைது
20 புரட்டாசி 2023 புதன் 08:00 | பார்வைகள் : 18343
பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் வைத்து வீடற்றவர் ஒருவரை தீவைத்து எரிக்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் rue Géo-Chavez வீதியில் இடம்பெற்றுள்ளது. வீடற்ற நபர் (SDF) ஒருவர் மீது பிறிதொரு நபர் எளிதில் தீப்பற்றக்கூடிய திரவம் ஒன்றை பாய்ச்சியுள்ளார். பின்னர் அவரை தீமூட்ட எத்தணித்த வேளையில், விரைந்து சென்ற காவல்துறையினர் அவரை மீட்டனர். மேற்படி செயலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான நபரின் தோள்பட்டை மற்றும் கழுத்துப் பகுதி எரிகாயங்களுக்கு உள்ளானது. அவர் Tenon மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, தாக்குதல் நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்குரிய நோக்கம் குறித்து அறிய முடியவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan