தென்னாப்பிரிக்காவில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 20 பேர் பலி
.jpg)
19 புரட்டாசி 2023 செவ்வாய் 12:47 | பார்வைகள் : 12130
தென்னாப்பிரிக்காவில் பேருந்து ஒன்றும் பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரச் சுரங்க அகழ்வு பணிகளுக்காக தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றும் பாரவூர்தியொன்றுமே இவ்வாறு மோதுண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரவூர்தியின் சாரதியானவர் சாரதி அனுமதி பத்திரமின்றி கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பாரவூர்தியின் சாரதியின் கவனக்குறைவால இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் மேலும் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025