குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மின் கட்டண நிவாரணம்
19 புரட்டாசி 2023 செவ்வாய் 09:04 | பார்வைகள் : 7929
இலங்கையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மின்சார கட்டணத்தில் நிவாரண அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கும் ஐ.நா சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மின்சாரக் கட்டணத்தைச் சமன்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கருத்து பரிமாற்றப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல்கள் நேற்று அமைச்சில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கான பசுமை நிதி வசதிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan