விக்னேஷ் சிவனின் அடுத்த திரைப்பட நாயகன் யார் தெரியுமா?
19 புரட்டாசி 2023 செவ்வாய் 08:04 | பார்வைகள் : 8474
பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அஜித் நடிக்க இருந்த படம் உருவாக இருந்த நிலையில், திடீரென அந்த படம் டிராப் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த படத்தை உலக நாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம் சென்டர் நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று விக்னேஷ் சிவன் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு டேட்ஸ் கொடுத்து அதாவது பேரீச்சம்பழம் கொடுத்து தனது வாழ்த்துக்களை பிரதீப் ரெங்கநாதன் தெரிவித்தார். அவருக்கு தனது நன்றியை விக்னேஷ் சிவன் தெரிவித்தார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தில் தேதி கொடுப்பதை தான் மறைமுகமாக டேட்ஸ் கொடுத்து பிரதீப் ரங்கநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகார உருவ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்பது போனஸ் தகவல் ஆகும்.


























Bons Plans
Annuaire
Scan