Paristamil Navigation Paristamil advert login

விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை..

விஜய் ஆண்டனியின் மகள்  தற்கொலை..

19 புரட்டாசி 2023 செவ்வாய் 07:14 | பார்வைகள் : 8660


நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் லாரா, திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகினர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த விஜய் ஆண்டனியின் மகள் மீரா, கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு தனது அறையில் தூங்க சென்றவர் தனது துப்பட்டாவில் தூக்கில் தொங்கியதாக தெரிகிறது

விஜய் ஆண்டனி வீட்டின் பணியாளர் இன்று அதிகாலை லாரா தூக்கில் தொங்கியதை பார்த்து உடனடியாக அவருடைய வீட்டார்களிடம் கூறிய நிலையில் உடனடியாக அவர் சென்னை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து இறந்துவிட்டதாக கூறியதை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் காவேரி மருத்துவமனை சென்று இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

விஜய் ஆண்டனி மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் விஜய் ஆண்டனி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்