எலியை உயிருடன் விழுங்கிய இளைஞன் - மிருகவதை எதிர்ப்பு ஆர்வலர்கள் வழக்கு பதிவு!!

18 புரட்டாசி 2023 திங்கள் 20:10 | பார்வைகள் : 11232
இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடனான விருந்து நிகழ்வொன்றின் போது எலி ஒன்றை உயிருடன் விழுங்கியுள்ளார். இச்செயலுக்கு மிருகவதைக்கு எதிரான அமைப்பு ஒன்று வழக்கு பதிவு செய்துள்ளது.
இச்சம்பவம் Thiers (Marseille) நகரில் இடம்பெற்றுள்ளது. இளைஞர் ஒருவர் சிறிய எலி ஒன்றை உயிருடன் பிடித்து, பின்னர் அதனை தனது வாய்க்குள் கொண்டு சென்று அதனை உயிருடன் சாப்பிட்டுள்ளார். அதனை காணொளியாக பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.
இணையவாசிகளை அதிர்ச்சியடைய வைத்த இந்த காணொளி, மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதேவேளை, La Fondation 30 Millions எனும் மிருகவதைக்கு எதிரான அமைப்பு மேற்படி சம்பவத்துக்கு கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், குறித்த இளைஞன் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1