Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் ஜனாதிபதி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி இடையிலான சந்திப்பு

உக்ரைன் ஜனாதிபதி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி இடையிலான சந்திப்பு

15 புரட்டாசி 2023 வெள்ளி 10:40 | பார்வைகள் : 6977


உக்ரைன் ஜனாதிபதி வொளேடிமிர் செலன்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளார்.
 
அமெரிக்காவுக்கான விஜயம் மேற்கொண்டு, உக்ரைன் ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
அத்துடன், அடுத்த வாரம் நியுயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் இரண்டு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையில், கடுமையான போர் இடம்பெற்று வரும் நிலையில், வடகொரிய ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. 
 
இதன்போது, வடகொரிய ரஷ்யாவுக்கான ஆயுதங்களை வழங்க முன்வந்துள்ளது. 
 
இதனையடுத்து, அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு பின்னர், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை, அமெரிக்கா வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்