1000 ஆண்டுகள் பழமையான ஏலியன்ஸ்களின் உடல்கள்
15 புரட்டாசி 2023 வெள்ளி 10:30 | பார்வைகள் : 7434
பல்வேறு புதுப்புது ஆராய்ச்சிகளை மனித இனம் மேற்கொண்டுவரும் நிலையில், வேற்று கிரகவாசிகளான ஏலியன்கள் இருப்பது உண்மையா அல்லது பொய்யா என்பது இன்றுவரை நிரூபிக்கப்படாமல் உள்ளது.
அதேநேரத்தில், ஏலியன்ஸ்கள் குறித்த விஷயங்கள் வெறும் வாய்வழிச் செய்திகளாக தான் நாம் அறிந்து வருகிறோம்.
இந்நிலையில், ஏலியன்ஸ் கண்காட்சியை நடத்தி மெக்சிகோ அரசு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கண்காட்சியில் 2 ஏலியன்ஸ்களின் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மிகவும் சிறிய அளவில் 2 உடல்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது.
இந்த சடலங்கள் குறைந்தது 1,000 ஆண்டுகள் பழமையானவை என கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


























Bons Plans
Annuaire
Scan