சிறுவன் மீது தாக்குதல் - மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலி
15 புரட்டாசி 2023 வெள்ளி 08:59 | பார்வைகள் : 13615
கத்திக்குத்து இலக்காகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயதுடையசிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளான்.
Corbeil-Essonnes (Essonne) நகரில் இந்த தாக்குதல் இவ்வார புதன்கிழமைநண்பகல் இடம்பெற்றிருந்தது. அருகருகே உள்ள சிறு நகர்ப்பகுதிகளானTarterêts மற்றும் Montconseil ஆகியவற்றைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும்சிறுவர்கள் இந்த மோதலில் புதன்கிழமை நண்பகல் ஈடுபட்டிருந்தனர்.
இந்த தாக்குதலில் 15 வயதுடைய சிறுவன் ஒருவன், இரண்டு இடங்களில்கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்திருந்தான்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுவன், இன்றுவெள்ளிக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி பலியானதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
Essonne மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் 129 மோதல்கள்இதுபோன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆண்டில் மூன்றுசிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan