Pantin : ஐந்து காவல்துறையினருக்கு ஓராண்டு சிறை

14 புரட்டாசி 2023 வியாழன் 14:25 | பார்வைகள் : 14270
மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு ஐந்து காவல்துறையினருக்குஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொபினி நிர்வாக நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை இந்த தண்டனையைவிதித்துள்ளது. 30 தொடக்கம் 48 வயதுடைய ஐந்து காவல்துறையினர் கடந்த2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில், மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டிருந்ததாககுற்றம் சாட்டப்பட்டு அவர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட உறுதுணையாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட அவர்களுக்கு பொபினி நீதிமன்றம் (Seine-Saint-Denis) சிறைத்தண்டனை விதித்துள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025