Paristamil Navigation Paristamil advert login

தொடர்ச்சியாக எச்சரிக்கைக்கு உள்ளாகும் மாவட்டங்கள் - இல்-து பிரான்சிற்கும் எச்சரிக்கை!!

தொடர்ச்சியாக எச்சரிக்கைக்கு உள்ளாகும் மாவட்டங்கள் - இல்-து பிரான்சிற்கும் எச்சரிக்கை!!

17 புரட்டாசி 2023 ஞாயிறு 09:07 | பார்வைகள் : 20198


நேற்று சனிக்கிழமை கடும் மழை மற்றும் வெள்ளத்திற்கு பல மாவட்டங்கள் செஞ்சிவப்பு எச்சரிக்கைக்கு உள்ளாக்கப்பட்டது.

ஆனால் இன்று காலை முதல் இல்-து-பிரான்ஸ் உட்பட பிரான்சின் 75 சதவீததத்திற்கும் அதிகமான மாவட்டங்கள் மஞ்சள் மற்றும் செஞ்சிவப்பு எச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்சின் 23 மாவட்டங்களிற்கு கடுமையான புயற்காற்றுடனான மழைக்கான செஞ்சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

100 கிலோமீற்றரிற்கும் அதிகமான புயற்காற்றுடன் கடுமையான மழை பெய்யும் ஆபத்து எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெரும் மின்னல் ஏற்படும் எனவும் பல மாவட்டங்களிற்கு மின்வெட்டு ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வழமைக்கு மாறான அதிக வெப்பநிலையே இந்த ஆபத்துகளிற்கு காரணமாக அமைந்துள்ளது.
 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026