இலங்கையில் பரிதாபமாக உயிரிழந்த தமிழ் மாணவி

17 புரட்டாசி 2023 ஞாயிறு 08:44 | பார்வைகள் : 9596
மோட்டார் சைக்களில் பின்னர் அமர்ந்து பயணித்த பாடசாலை மாணவின் தலை மீது மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் அந்த மாணவி உயிரிழந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலவாக்கலை-தவலன்தென்ன வீதியில் பூண்டுலோயா-பாளுவத்தை பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
ஆக்கரபத்தன பம்பரகெல, எபகென்லி தோட்டத்தில் வசித்து வந்த 17 வயதான விஜயராஜா திவ்யராணி என்ற பாடசாலை மாணவியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கண்டியில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் ஆக்கரபத்தன பிரதேசத்திற்கு தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது இந்த துரதிஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது.
சம்பவத்தில் தந்தைக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025