நல்லூர் உற்சவத்தின் போது மாயமான சிறுமி - மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
17 புரட்டாசி 2023 ஞாயிறு 05:11 | பார்வைகள் : 9943
யாழ். நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக வந்த நிலையில் காணாமல் போன இரண்டரை வயது சிறுமியை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி தனது தாய், பாட்டி மற்றும் ஒரு வயது சகோதரனுடன் நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்திற்காக கடந்த ஆறாம் திகதி நல்லூர் ஆலயத்திற்கு வந்துள்ளார்.
இவர்களுடன் நட்பாக பழகிய பெண் ஒருவருடன் அருகில் வியாபாரம் செய்ய செல்வதாக கூறி சிறுமி அங்கு சென்றதாக சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.
எனினும் சிறுமியும் குறித்த பெண்ணும் திரும்பி வராத காரணத்தினால் சிறுமியின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த சிறுமி வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி குறித்து தகவல் கிடைத்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan