ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் ஹீரோவாகும் கவின்?
16 புரட்டாசி 2023 சனி 15:09 | பார்வைகள் : 11466
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாக இருக்கும் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது என்பதும் இதனை அடுத்து ஜேசன் சஞ்சய் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை செய்து வருவதாகவும் கூறப்பட்டது.
ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனை அடுத்து துருவ் விக்ரம் நடிக்க போவதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி விஜய் சேதுபதியும் இல்லை, துருவ் விக்ரமும் இல்லை, ஜேசன் சஞ்சய் முதல் பட ஹீரோ கவின் என்று தெரிய வந்துள்ளது. ’டாடா’ திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது ’ஸ்டார்’ உள்பட இரண்டு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் கவின் தான், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாக இருக்கும் முதல் படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜேசன் சஞ்சய் இயக்கம், கவின் நடிப்பு, அனிருத் இசை, லைகா தயாரிப்பு என முதல் படமே பிரமாண்டமாக அமைந்துள்ளதால் இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan