ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் இருந்து விலகும் மகேஷ் தீக்ஷன
16 புரட்டாசி 2023 சனி 11:41 | பார்வைகள் : 9071
இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் மகேஷ் தீக்ஷன இந்தியாவுக்கு எதிராக இடம்பெறவுள்ள ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வியாழக்கிழமை 14 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் மகேஷ் தீக்ஷன வலதுபக்க தொடையில் தசைப்பிடிப்பால் அவர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரென தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனையில் அவரது தசையில் காயங்கள் ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகேஷ் தீக்ஷனவுக்குப் பதிலாக இலங்கை அணியில் ஷான் ஆராச்சிகே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் அணியின் தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan