சர்ச்சையை ஏற்படுத்திய போட்லினியம் நஞ்சு கலந்த உணவு - பாதிப்புஎண்ணிக்கை 15 ஆக உயர்வு

16 புரட்டாசி 2023 சனி 09:03 | பார்வைகள் : 15311
பிரான்சின் போர்தோ (Bordeaux) நகரில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்தியஎட்டு பேர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளநிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆகஉயர்வடைந்துள்ளது.
அங்குள்ள உணவகம் ஒன்றில் கடந்த சில நாட்களில் உணவருந்தியவர்களேபாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில்ஒருவர் தலையில் நரம்பு மண்டலம் வெடித்து உயிரிழந்திருந்தமை அறிந்ததே. இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளமை பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது..
தகரம் அல்லது கண்ணாடி போத்தல்களில் அடைக்கப்பட்டு வரும் உணவில்ஏற்படும் விஷத்தன்மையே இந்த போட்லினியம் (Botulism) ஆகும். மிக அரிதாகநிகழும் இந்த நோய்த்தாக்கத்துக்கு சரியான நேரத்தில் சிகிச்சை பெற தவறினால்மரணம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ளவர்களில் அமெரிக்கா, கனடா, போர்த்துக்கல், அயர்லாந்துமற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்தோ பல்கலைக்கழக மருத்துவமனையில் ஆறு பேர் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025