Élancourt : விபத்தில் சிக்கி துருக்கி அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் - சிகிச்சைபலனின்றி பலி
12 புரட்டாசி 2023 செவ்வாய் 16:56 | பார்வைகள் : 13978
Élancourt (Yvelines) நகரில் காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதிபடுகாயமடைந்த சிறுவன் ஒருவன், மேலதிக சிகிச்சைகளுக்காக துருக்கிஅழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சாவடைந்துள்ளான்.
கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 6,) Élancourt நகரில் இடம்பெற்றிருந்த இந்தவிபத்து அறிந்ததே. Sefa எனும் 16 வயதுடய சிறுவன், காவல்துறையினரின்மகிழுந்து மோதியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவனதுகுடும்பத்தினர், மேலதிக சிகிச்சைகளுக்காக தங்களது நாடான துருக்கிக்குஅழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், அங்கு வைத்து அவன் நேற்று திங்கட்கிழமை நண்பகல்பலியானதாக அவனது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேற்படி விபத்து தொடர்பாக காவல்துறையினர் மீது சிறுவனது குடும்பத்தினர்வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், காவல்துறையினரை கண்காணிக்கும் சிறப்புபடையினரான l'Inspection générale de la police nationale மேற்படி விபத்துதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan