தனி ஒருவன் 2 படத்தில் வில்லன் இவரா?

12 புரட்டாசி 2023 செவ்வாய் 14:46 | பார்வைகள் : 7585
கடந்த 2015ம் ஆண்டில் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்து வெளிவந்த படம் ' தனி ஒருவன்'. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி படமாக மாறியது.
சமீபத்தில் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதிலும் ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடிக்கின்றனர். ஆனால், இந்த படத்தில் வில்லனாக எந்த நடிகர் நடிப்பார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். இந்த பாகத்தில் வில்லனாக நடிக்க நடிகர் பஹத் பாசில் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் பஹத் பாசில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.