பிரித்தானியாவில் 2 வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கதி

12 புரட்டாசி 2023 செவ்வாய் 09:55 | பார்வைகள் : 12035
பிரித்தானியாவின் ஹாம்ப்ஷயர் பகுதியில் உள்ள குளத்தில் 2 வயது பெண் குழந்தையின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
போர்டனுக்கு அருகே கிங்ஸ்லி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு பிறகு 2 வயது பெண் குழந்தை காணாமல் போகியுள்ளது.
இதையடுத்து காணாமல் குழந்தையை தேடும் பணியில் மீட்பு படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
ஹாம்ப்ஷயர் பகுதியில் உள்ள கிங்ஸ்லி குளத்தில் இருந்து குழந்தை மோசமான உடல் நிலையுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
பின்னர் திங்கட்கிழமை மாலை இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழங்கிய தகவலில், சிகிச்சை பலன் இல்லாமல் குழந்தை மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தது.
இந்நிலையில் 2 வயது பெண் குழந்தை குளத்தில் உயிரிழந்த சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் குழந்தையை இழந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு சிறப்பு அதிகாரிகள் ஆறுதல் தெரிவித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1