Paristamil Navigation Paristamil advert login

இரண்டு படகுகள் ஒன்றுடன் ஒன்றுடன் ஒன்று மோதியதில் - 16 பேர் காயம்

இரண்டு படகுகள் ஒன்றுடன் ஒன்றுடன் ஒன்று மோதியதில் - 16 பேர் காயம்

12 புரட்டாசி 2023 செவ்வாய் 09:51 | பார்வைகள் : 10181


இரு சுற்றுலாப்பயணிகளின் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 16 பயணிகள்காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் சனிக்கிழமை காலை Marseille நகரகடற்பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது. 

 

 

ஏழு சுற்றுலாப்பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக பயணித்த படகுஒன்றும், 14 சுற்றுலாப்பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த படகு ஒன்றும்ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்தில் 16 சுற்றுலாப்பயணிகள்காயமடைந்துள்ளனர். அவர்களில் நால்வர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

 

விபத்து தொடர்பாக காவல்துறையினர் தெரிவிக்கையில் அதிவேகமாக பயணித்த‘விரைவுப்படகு’ கட்டுப்பாட்டை இழந்து மரப்பலகையிலான இரண்டாவதுபடகினை மோதி தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்